Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறும். நவம்பர் மாதம் 12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இந்த நான்கு நாட்கள் நடைபெறும் முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்ற விண்ணப்பம் வழங்கலாம். அதே சமயம் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் இந்த முகாமில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |