சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.அதன்படி மூவாயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க தமிழகத்திலிருந்து இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் 12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம்,ஆன்மீகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களை காசிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் காசி மற்றும் அயோத்தி உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவர். கங்கையில் படகு சவாரியும் உண்டு. இதில் பயணச் செலவு மற்றும் தங்கும் இடம் முழுவதும் இலவசம் தான். விருப்பமுள்ளவர்கள் https://kashitamil.iitm.ac.in/என்ற இணையதளத்தில் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.