Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் நாளை…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற 17 ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்திருந்தார். இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாம் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |