தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது.
இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால் இந்த வருடம் பணத்தை ரொக்கமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, ஆவின் நெய் ஆகியவற்றுடன் ரூ.1000 அடங்கிய பரிசு தொகுப்பு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் கடந்த காலங்கள் போல ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கி ரூ.1000 வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.