Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. லஞ்சம் கேட்டால் உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பொதுமக்களிடம் சார்பதிவாளர் அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்டால்  உடனே தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

தமிழக அரசின் பதிவுத்துறையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருவாயாக நடப்பாண்டில் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இணையத்தின் வழியாக செலுத்தும் நடைமுறையானது முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சார் பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பின்படி பத்திரப்பதிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் வழிகாட்டி மதிப்பை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ பத்திரப் பதிவினை மேற்கொள்ள கூடாது.

அதேபோல் பொதுமக்களும் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு மதிப்பின்படி பத்திரப்பதிவு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து வழிகாட்டி மதிப்பை குறைத்து பதிவு செய்தது தொடர்பான பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இழப்பும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யும் போது பொதுமக்கள் யாராவது அலுவலர்களுக்கு அல்லது இடைத்தரகர்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுக்க வேண்டாம். ஆனால் அவ்வாறு லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பொதுமக்கள் பதிவுத்துறை தலைவர், அரசு செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |