Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுதல்சி றப்பு பேருந்து….. போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல் வழியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இன்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஏற்கனவே நிரம்பியுள்ளது. அதனால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேட்டில் 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியது, தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தேவைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்து மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |