Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. விழிப்புடன் இருக்க வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம்  கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் பலனாக கொரோனா தாக்கம் தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது.

இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத 1.32 கோடி பேரைக் கண்டறிந்து தடுப்பூசி போடவும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |