Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதியுதவி…. அரசின் புதிய திட்டம் அறிமுகம்….!!!!

தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நலவாரியத்தில் பதிவு செய்து, சொந்தமாக வீடு இல்லாமல் வீட்டுமனை வைத்திருந்தால் அவர்கள் சுயமாக வீடு கட்டிக்கொள்ள 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தகுதிகள் என்னவென்றால், முதலில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்து குறைந்தது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. எவ்விதமான அரசு வீட்டு வசதி திட்டத்தில் பயன் பெறாமல் இருக்க வேண்டும். வருமானச் சான்று, பட்டா நகல் மற்றும் இதர ஆவணங்களை புகைப் படத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |