தமிழகத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது.அதற்கான புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து சுற்றுலா துறையும் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னையிலிருந்து அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த சுற்றுலா திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளது.
முதல் திட்டத்தில் சென்னை திருநெல்வேலி, பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை கல்யாண பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில்,திருநீர்மலை நீர் வண்ணப் பெருமாள் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
அடுத்ததாக இரண்டாவது திட்டத்தின் படி திருநெல்வேலி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரவ ராகவ பெருமாள் கோவில்,ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இந்த திட்டத்தில் பக்தர்கள் இந்த கோவில்களுக்கு எல்லாம் சென்று தரிசிக்க ஒரு நபருக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.