தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து வகை இனிப்புகள் மற்றும் ஒரு கார வகையை விற்பனை செய்வதற்கான பணியை ஆவின் தொடங்கியுள்ளது. அதன்படி நெய் பாதுஷா 250 கிராம் 190 ரூபாய், நைஸ் அல்வா 250 கிராம் 190 ரூபாய், ஸ்டஃப்டு மோதி பாக் 250 கிராம் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் 320 ரூபாய், காஜு கத்திலி 250 கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கலவை இனிப்புகள் அடங்கிய பெட்டி 250 கிராம் 450 ரூபாய் மற்றும் மிக்சர் 250 கிராம் 100 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.
மொத்தமாக இனிப்பு மற்றும் மிக்சர் வாங்குவோருக்கு சலுகை வழங்கப்பட உள்ளதாகவும் ஆவின் அறிவித்துள்ளது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்த ஆவின் விற்பனை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தமாக இனிப்பு வகைகள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, குறைந்த விலையில் வழங்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.