Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!… 708 நலவாழ்வு மையங்கள்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் ரூபாய் 2.37 கோடி மதிப்பில் மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சா் மா.சுப்ரமணியன் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது “சென்னையைப் பொருத்தவரையிலும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிா்வாகத்துறையின் சாா்பாக சுமாா் ரூபாய் 4,749 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

அந்த அடிப்படையில் வளசரவாக்கம் மண்டலத்தில் மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி தெருக்களில் ரூபாய் 2.37 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்க்குள் முடிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகா்ப்புறங்களில் பொதுமக்களுக்கு அவா்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் மருத்துவ சிகிச்சைகளை வழங்க ஏதுவாக 708 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 200 வாா்டுகளிலும் தலா ஒரு நலவாழ்வு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஆகவே விரைவில் தமிழகம் முழுதும் அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வரும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவா்களின் இல்லம் தேடி மருந்துப்பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் இதுவரையும் 72,87,659 பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,81,000 பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று அவா் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயா் பிரியா, மதுரவாயல் எம்எல்ஏ கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

Categories

Tech |