தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று இரவு 10 மணியுடன் ஓய்வதால் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நேரடி, காணொளி வாயிலாக வாக்கு சேகரிக்கும் திமுக தற்போது வாக்காளர்களின் மொபைல் எண்ணிற்கு 8037804564, 911725248218 போன்ற எண்களில் இருந்து அழைப்பு விடுத்து வாக்கு சேகரிக்கிறது. அந்த அழைப்பில் திமுகவின் சாதனைகளை சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் (குரல் பதிவு) வாக்கு கேட்கிறார்.