தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மலருடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 22 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.