Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ATM பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏடிஎம் கார்டு பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் பின் நம்பரை பெற்று மோசடிகள் நடைபெறுகிறது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை தொழில்நுட்ப உதவியுடன் திருடப்படுவதால் மக்கள் அலார்ட்டாக இருக்க வேண்டும். திருடப்படும் படம் வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்படுவதற்கு முன்பு போலீஸ் புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |