தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்த திமுக தலைவர் ஸ்டாலின், எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பவன் நான் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளேன். ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி கவலைப்படும் ஸ்டாலினாக உங்கள் முன்பு நிற்கிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு புயல் ஏற்படும் போதும் தமிழக அரசு கேட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நமது மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.