தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சித்திரை மாதம் ஒன்றாம் தேதியே தமிழ் புத்தாண்டாக கொண்டாட பட வேண்டும். பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடக்கூடாது. வரலாற்றை மாற்ற முயற்சி செய்யக்கூடாது என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ் புத்தாண்டை மாற்றி தமிழ்நாட்டு மக்களை புண்படுத்துவதே திமுகவின் கொள்கை. மாநிலத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் தேதி, நாளை மாற்றி பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றது.
தமிழ்நாடு நாள் என மக்களை குழப்பிய திமுக தற்போது தமிழ் புத்தாண்டையும் மாற்றி மக்களை மேலும் புண்படுத்துகிறது. ஆன்மீக நம்பிக்கையில் மூக்கை நுழைத்து பக்தர்களின் நம்பிக்கையை சிதைப்பதில் திமுக தீவிரமாக உள்ளது. நல்ல தீர்ப்பை மக்கள் எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சதித் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.