Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி….. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை…..!!!! 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் தன்னை நாளை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என்றும் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |