தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதனால் தற்போது மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.590-க்கு விற்பனையான வஞ்சிரம் ரூ.640-க்கும், கருப்பு வாவல் ரூ.450-க்கும், இறால் 400 க்கும், நண்டு 240 க்கும், சங்கரா 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றிஇனிவரும் நாட்களில் மீனின் விலை 50 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Categories