தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று 12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்கள் பழைய கட்டிடங்களில் தங்கி இருந்தால் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கூடைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், மரத்தின் அடியிலோ திறந்த வெளியிலோ நிற்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.