Categories
அரசியல்

தமிழக மக்கள் காதுல பூ சுத்தாதீங்க முதல்வரே!…. ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது.

இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுக்க தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ( 5-2-2022 ) இன்று காலை 11-00 மணி அளவில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த திமுக எம்பி காந்திசெல்வன் நீட் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின் ? தமிழக மக்களுடைய காதில் பூ சுற்ற எண்ணாதீர்கள்.

ஏழை, எளிய மாணவர்களின் டாக்டர் கனவு நீட் தேர்வால் பாதிக்கப்படவில்லை. எதனை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என கூறப்படுகிறது ? மத்திய அரசு மருத்துவ படிப்பில் தமிழகத்திற்கான சீட்டை அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் விளக்கத்தை முதலில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |