Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்… ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!!

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்..

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில்  வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது..

இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்போர் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்..

தமிழக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டதாவது, தமிழ்நாடுஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |