Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி இதற்கு சர்டிபிகேட் தேவையில்லை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு எழுத உள்ளனர். அதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்பே முழு பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. அரையாண்டு தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் தொடங்கி விடும்.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக மாணவர்கள் Bonafide சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த சான்றிதழை வாங்க முற்பட்டதால் பல சிக்கல்கள் எழுந்ததால் இந்த சர்டிபிகேட் கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |