தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருந்தது.
இதனையடுத்து அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் 20 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.