Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

யுபிஎஸ்சியின்குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் உதவித்தொகையுடன்  இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சேர்க்கை நடைபெறுவதோடு, ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள்  இன்று (ஜூன் 24) மாலை 6 மணி முதல் ஜூன் 27 மாலை 6 மணிவரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

Categories

Tech |