Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான உரிய விண்ணப்பங்களை மாணவர்கள் https: //bcmbcmw.tn.gov. in/welf schemes. htm#scholarshipschemes  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |