Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஜூன் 12 வரை விடுமுறை….. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். அதன்பிறகு 11-ஆம் வகுப்புக்கு 9 முதல் மே 31-ஆம் தேதி வரையும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ஆம் தேதி வரையும் பன்னிரண்டாம் வகுப்புக்கு 5 முதல் தேதி வரையும் பொது தேர்வு நடைபெறும்.

இதில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ஏப்ரல் 5 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். இதன்பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மே 13-ஆம் தேதி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |