தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது,
ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை நகலெடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்.
செய்முறை தேர்வு முடிவடைந்த பிறகு மதிப்பெண் பட்டியலை மே 4-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் பெற வேண்டும் .
பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
செய்முறைத் தேர்வுக்கான பதிவேற்றம் முடிவடைந்த பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்படைக்கவேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ்களை இணைக்கப்பட்ட படிவத்தை மாவட்ட கல்வி அலுவலர் பூர்த்தி செய்து அலுவலக முத்திரையுடன் மே 12-ஆம் தேதிக்குள் இவ்அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.