Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து விட்டதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கனமழை காரணமாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சிபிஎஸ்சி தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஐ போர்டுக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு நவம்பர் 30 முதல் டிச-9 வரையும்,  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 1 முதல் 18 வரையும் நடைபெற உள்ளது.

Categories

Tech |