Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக இந்த வருடம் குடியரசு தின  நிகழ்ச்சிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் பார்க்க பொது மக்கள், பள்ளி மாணவர்கள் வர வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியக் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஜனவரி 26 (நாளை) காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலமாக பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக இந்த வருடம் பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆகவே குடியரசு தின விழாவை தொலைக்காட்சி/ வானொலியில் கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |