தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுகள் அக்டோபர் 1ஆம் தேதி நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு காலண்டர் தேர்வு நடப்பதால் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.