தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
அதே போல பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டு www.tnresult.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
ஒரு பாடத்திற்கு பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் பிளஸ் 1 முடிவுகள் வெளியாகியுள்ளது. பிளஸ் 1 தேர்வில் மொத்தம் 96.04 சதவீத மாணவர்களும், 94.38 சதவீதம் மாணவிகளும் என 97.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கோவை 98.10 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. அரசு பள்ளிகள் 92.71 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.95 சதவீதம் , தனியார் பள்ளிகள் 99.51 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.