தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தின் கீழ் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கி வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளம் முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-28190448, 044-28190412, 044-28190448 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories