தமிழகத்தில் கொரோணா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்களை குறைந்துள்ள போதிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மீதமிருக்கும் நாட்களில் பாடம் நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது சவாலாக உள்ளது.
இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் இந்தத் தொடர் விடுமுறை ஈடுகட்டும் விதமாக இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்க கூறியுள்ளார்.அனைத்து சனிக்கிழமைகளிலும் வழக்கம்போல வகுப்புகள் நடை பெற்றால் மட்டுமே தற்போது மீதமுள்ள பாடத் திட்டத்தை முடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.