Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு?…. வெளியான தகவல்…!!!!

தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு கோடை கால விடுமுறை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தொற்று பாதிப்பின் தாக்கமானது குறைந்ததை  அடுத்து,  பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

அதன்படி 10 முதல் 12 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வானது ஏப்ரல் மாதம்  5-ஆம் தேதி முதல் மே மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து பொது தேர்வானது மே 6-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 1 முதல் 5 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்  மே 13ஆம் தேதி வரை பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படுவது தேவையற்றது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, ஏற்கெனவே வெளிவந்த தகவல்களில், மாற்று கருத்துக்கள் இருக்காது என திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24 முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை நாட்கள் வெகுவாக குறைந்துள்ளது.

Categories

Tech |