செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகளை மே 4-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வழக்கமாக செய்முறை தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். ஆனால் இந்த வருடம் தேர்வு நேரம் 2 பணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.