Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் அல்லது பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |