தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதன் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.