Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்வாறாக தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக பல போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்காக சட்டப் போராட்டம் நடத்தினாலும், ஹைடெக் ஆய்வக மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |