தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதற்கு ஏற்ப தயாராகிக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.