தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறிதேர்வுக்கு வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி படிக்கும் மாணவ மாணவியரிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் திறனறி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடக்கும் இந்த தேர்வில் 1500 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மாதம் 1500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ் இ மற்றும் ஐசிஎஸ் இ உட்பட அனைத்து பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு தரநிலையில் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.