உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வர விமான பயணச் செலவுக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழக மாணவர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி, மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல், மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு செலவுக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.