Categories
தேசிய செய்திகள்

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி அடித்து சுங்க சாவடி ஊழியர்கள்… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்ற பொழுது பாஸ்ட்ராக் வேலை செய்யவில்லை. அதனால் பணத்தை செலுத்தி முன்னாள் செல்லவும் என சுங்கச்சாவடி ஊழியர் கூறியுள்ளார்.

அப்போது பாஸ்டாக்கில் பணம் இல்லை எனவே ஸ்கேன் செய்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஸ்ட் ட்ராக் காலக்கேடு முடிந்த நிலையில் பணத்தை கட்டி விட்டு செல்லுங்கள் என சுங்கச்சாவடி ஊழியர் தெரிவித்து ஹெல்மெட்டால் தாக்கி வாகனத்தை பின்னால் எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சட்ட கல்லூரி மாணவர்கள் முதலில் எங்களுக்கு தீர்வு சொல்லிவிட்டு அதன் பின் மற்றவர்களை அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக சட்ட கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனால் சுங்கு சாவடிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மறைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் உள்ளூர் பொதுமக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக திரண்டு தமிழகத்திலிருந்து வந்து எங்களிடம் பிரச்சனை செய்கின்றார்கள் என்று கூறி சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் கார் கண்ணடிகளை உடைத்துள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் கலவரம் போல சுங்க சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது பற்றி தகவல் அறிந்த வடமாலா பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |