Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் இனி படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்…. அரசின் சூப்பரான திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் வகையிலான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.

அதில் மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளை படித்துக் கொண்டிருக்கும் போதே பணிபுரிய ஏதுவாக மெண்டோ நிறுவனம், கண்ணபிரான் மில்ஸ், வீவிடி என், கேஜி குரூப், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் போன்ற ஆறு தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் படித்துக் கொண்டே சம்பாதிக்க முடியும். இதில் 1560 மாணவர்கள் பயனடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |