Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் 5,318 காலி பணியிடங்கள்…. அறிவிப்பாணை திடீர் ரத்து…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு தேர்வுகள் இந்த ஆண்டில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பதவிகளுக்கு காலியாக இருக்கும் சுமார் 5,318 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.இந்நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான ஆட்சி சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதாவது டிஎன்பிஎஸ்சி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தில் புதிய ஆட்சி சிறப்புக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்படுகிறது. ஏனென்றால் அனைத்து மாநில அரசு துறைகளுக்கான புதிய ஆட்சி ஏற்பு செயல்முறையை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதால் மின்வாரிய பணிகளுக்கான அறிவிப்பை தற்போது அரசு ரத்து செய்கிறது.இந்த தேர்வுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள் சேர்ப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |