Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது”… இலங்கையிடம் வலியுறுத்திய இந்தியா…!!!

மீன் வளம் குறித்த கூட்டத்தில் இந்தியா-இலங்கை பங்கேற்ற ஐந்தாவது கூட்டுக் குழு இன்று நடைபெற்றது.

இலங்கையிடம், இந்திய மீனவர்களை கையாளும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றது இந்தியா. மீன் வளம் குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது கூட்டகுழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மீன்வளத் துறைச் செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு பங்கேற்றது.

இலங்கை தரப்பில் மீன்வளத்துறை மந்திரியின் செயலாளர் ரத்தன்நாயக பங்கேற்றார். இதில் தமிழக மீனவர்கள் சார்பாக பேசப்பட்ட போது மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |