இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.
அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் வைத்திருந்த படகுகளையும் சிறை பிடித்துக் கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தான் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதற்குள் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.