Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக மீனவர்கள் 41 பேர் கைது…. எல்லை தாண்டி சென்றதாக குற்றம்…. குமரியில் பரபரப்பு…!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி துத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியஜஸின் தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென விசைப் படகு பழுதாகியுள்ளது. இதனால் காற்றின் வேகம் சென்ற திசைக்கு படகு சென்றுள்ளது. அப்போது இந்தோனேஷியா கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து விசைப்படகு பழுதாகி நின்றதை பார்த்த கடற்படையினர் அந்த படகை சுற்றி வளைத்துள்ளனர். இதன்பிறகு எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி  படகில் இருந்த ஜான் போஸ்கோ, சிஜின் ஸ்டீபன், ஜோமோன், இமானுவேல், ஜோஸ், முத்தப்பன், லிபின், பிரபின், ஜெசின்தாஸ் ஆகிய 8 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 7-ஆம் தேதி கேரளாவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 33 மீனவர்களை செஷல்ஸ் தீவில் கைது செய்து வைத்துள்ளனர். இதில் வினோத், சிபு, அப்சலின், நிக்கோலஸ், சதீஷ், சிபு, சோஜன், சேவியர், ஜெபர்சன், ஜெரின், சாம்குமார், டைக்கோஸ்டன், ஜாய்கோ, ராம்குமார், மில்டன், இஷாக், ஜெனிஸ், குக்ளின், வின்சன்ட், மைக்கேல், சுனில் ஆகிய 22 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆவார். இதைத்தவிர மீதம் உள்ளவர்கள் திருவனந்தபுரம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் 41 பேர்  இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |