மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், அது குறித்து எந்த முடிவையும் விசை அறிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “பதவியேற்பு 2031 ஜோசப் விஜய் என்னும் நான்” என்று வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சியில் நல்ல தேர்வு நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தேர்வு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.