Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு…. சொத்து வரி உயர்வால் மக்கள் அதிர்ச்சி…!!!!

சொத்து வரி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை திருப்பூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த மாநகராட்சியில் வீட்டு வரி 1.60 லட்சமாகவும், வர்த்தக வரி 60,000 ஆகவும், தொழிற்சாலை வரிவிதிப்புகள் 40 ஆயிரம் ஆகவும் உள்ளது. இந்த வரி விதிப்புகள் நகரைப் பொறுத்தவரை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏ பிரிவு பகுதிகளில் இருக்கும் ஓட்டு வீடுகளுக்கு  3.40 ரூபாய், கான்கிரீட் வீடுகளுக்கு 4.55 ரூபாய், தொழிற்சாலைகளுக்கு 6.80 ரூபாய் மற்றும் 9.6 ரூபாய், வர்த்தக வரி 10.20 ரூபாய் 13.59 ரூபாய் என சதுர அடியை பொறுத்து வரி  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பி பிரிவு பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு 2.60 மற்றும் 3.47 ரூபாய், தொழிற்சாலைகளுக்கு 5.20 மற்றும் 6.94 ரூபாய், வர்த்தக நிறுவனங்களுக்கு 7.81 மற்றும் 10.41 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகு சி பிரிவு பகுதியில் சிறிய வீடுகள் மற்றும் குறுக்குத் தெரு அடங்கும். இந்தப் பிரிவில் வீடுகளுக்கு 2.03 மற்றும் 2.70 ரூபாய் , தொழிற்சாலைகளுக்கு 4.05 மற்றும் 5.40 ரூபாய், வர்த்தக கட்டடங்களுக்கு 6.07 மற்றும் 8.10 ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து வரிகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பின்படி உயர்த்தப்படும். இதைக் கேட்டு பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ‌சொத்து வரி உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் கூறியுள்ளார். இந்த வரி விதிப்பின்  மூலமாக நகராட்சிக்கு கணிசமான அளவிற்கு லாபம் கிடைக்கும். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரியை காட்டிலும் திடக்கழிவு மேலாண்மை வரி அதிகமாக உள்ளது. இதையடுத்து சொத்து வரி கட்டாத கட்டிடங்கள், குறைந்த அளவு கணக்கு காட்டிய கட்டிடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது. இதேப்போன்று குடிநீர் குழாய் இணைப்புகளும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை பறக்கும் படை அதிகாரிகள் மூலம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் குறைந்தபட்ச வரி உயர்வு விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |