தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தவறான வதந்திகளை பரப்பிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமீரகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அணிந்திருந்த ஆடை குறித்து ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அந்தச் ட்வீட் பதிவில் தமிழக முதல்வர் துபாய் செல்லும் போது அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை ரூபாய் 17 கோடி என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார் என்று இருந்தது. அந்த தகவல் பொய்யானது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்வீட் செய்திருந்த அந்த நபரின் விவரத்தை வினய் கார்த்திகேயன் என்பவர் அமைச்சரை டேக் செய்து ட்வீட் செய்தார்.
இதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரிப்ளை செய்திருந்தார். அப்போதே நெட்டிசன்கள் பலர் பா.ஜ.க நிர்வாகி அருள் பிரசாத்துக்கு அரசு ஸ்கெட்ச் போட்டு விட்டது என்று கமெண்ட் செய்து வந்தனர். இது தொடர்பாக கோவை மாவட்ட எடப்பாடி பகுதி காவல்துறையினர் பா.ஜ.க செயலாளர் அருள் பிரசாத்தை அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அருள் பிரசாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் துபாய் பயணம் சென்றிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.